சொந்த ஊர் திருநெல்வேலி. பி.ஏ ஆங்கில இலக்கியம். எம்.ஏ தொடர்பியல் துறை பட்ட மேற்படிப்பு முடித்திருக்கிறேன். அப்பா பெயர் ஜானகிராமன். அம்மா பிரேமா நாகலட்சுமி. கல்லூரி காலம் தொடங்கி எழுதுவதில் கொண்ட விருப்பம் காரணமாக பத்திரிகைகளில் எழுதத் தொடங்கினேன். தொலைகாட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு எழுதியுள்ளேன். தொலைகாட்சித் தொடர்களுக்கு திரைக்கதை வசனங்கள் எழுதி வருகிறேன். திரைப்படங்கள் பார்ப்பதில் உள்ள ஆர்வத்தினால் திரைப்படங்கள் குறித்து எழுதத் தொடங்கிய எழுத்துப் பணி சமூகம், கலை, அரசியல், சிறுகதைகள் என விரிந்திருக்கிறது. கணவர் அய்யப்பன் மகாராஜன். குழந்தைகள் பால மயூரா, ராஜ மித்ரா. தற்போது சென்னையில் வசித்து வருகிறேன்.