குட்டி யானையின் பெருநெருப்பு

ஒரு நண்பகல் நேரம். எனது குழந்தைகள் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இருவரும் அப்போது பள்ளிக்குப் போகத் தொடங்கியிராத வயது. குழந்தைகள் விழித்திருக்கும் சமயமும், உறங்கும் நேரமும் அம்மாக்களுக்கு வெவ்வேறான உலகங்கள்.  சிறிது நேரம் நம்மைப் பற்றி சிந்திக்க கிடைக்கும் நொடிகள் அவர்கள் உறங்கும்போது மட்டுமே வாய்க்கக்கூடியவை. அப்படியான அந்தப் பகல்பொழுதில், மனநிலையில் சோர்வு ஏற்பட்டிருந்தது. ‘என்ன செய்து கொண்டிருக்கிறோம்..என்ன செய்வோம்?” என்கிற ஒரு மனநிலை அது. எதிர்காலம் எங்கிருந்தோ சடாரென்று குதித்து முன்வந்து நின்று பயமுறுத்தத் தொடங்கியது. … Continue reading குட்டி யானையின் பெருநெருப்பு