HomeView All Posts (Page 9)

வயல்காட்டு இசக்கி என்கிற புத்தகம். ஆய்வாளர் திரு அ.கா பெருமாள் எழுதியது. மூன்று நாட்களுக்கு முன்பு தான் புத்தகம் வாங்கினோம். புத்தகத்தின் தலைப்பு ஈர்த்ததால், முதல் கட்டுரை வாசிக்கத் தொடங்க, விடுவேனா என்று ஏறி உட்கார்ந்து கொண்டது. அடுத்தடுத்து கட்டுரைகளினால் கீழே வைக்க மனமில்லை. ஒரு வரி கூட அனாவசியமானது இல்லை. அனைத்துக் கட்டுரைகளுமே ஒரு சிறுகதைக்கான தொடக்கமே. எல்லா வரிகளும் வார்த்தைகளும்..

Read More

தல புராணம் என்கிற இந்தப் புத்தகத்தை வாங்கியவுடன் வாசிக்கத் தேர்ந்தெடுக்க இரண்டு காரணங்கள். ஒன்று முழுவதும் சென்னையைப் பற்றிய வரலாற்றைச் சொல்கிறது என்பது. மற்றொன்று இதனை எழுதிய பேராச்சி கண்ணன். தகவல் தொடர்பியல் படிக்கையில் என்னுடைய சீனியர் அவர். படிக்கிற காலத்தில் பேராச்சி கண்ணனுடன் எங்கள் தொடர்பியல் துறை நடத்திய பத்திரிகைக்காக செய்தி சேகரிக்கச் சென்றிருக்கிறேன். ஒரு தகவலுக்காக எத்தனை பேரை சந்திக்க

Read More

உயிர்த்த ஞாயிறு வாசித்ததில் இருந்து மனம் நிலை கொள்ளாமல் இருக்கிறது. ஸர்மிளா அவர்களை பேஸ்புக் எழுத்துகள் வழியாகத் தெரியும். ஒரே ஒருமுறை புத்தகக் கண்காட்சியில் சந்தித்திருக்கிறோம். மெஸன்ஜரில் சொற்பமாய் உரையாடியிருக்கிறோம். அவ்வளவே தான். சிக்கலான பொழுதில் தன்னுடைய வாழ்க்கையைக் கடத்திய அனுபவங்களை உயிர்த்த ஞாயிறில் வெளிப்படுத்துகிற ஸர்மிளா இன்னும் காத்திரமானவராகத் தெரிகிறார். அவர் சந்தித்த சிக்கல்களும், மனப்போராட்டங்களும் அதிலிருந்து மீண்டதும் யாருக்கோ என்பது போல

Read More

75 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் டெல்லி பிர்லா ஹவுசில் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தி சுடப்பட்டு கொல்லப்பட்டார். ஒரு தேசத்தின் முகம் அவர். சூரியனின் நேரடி பார்வையில் மக்கள் கூட்டத்திற்கு நடுவில் நிகழ்த்தப்பட்ட படுகொலை அது. எப்போதுமே இந்தியாவின் தலைகுனிவாக அமைந்திருக்கிற மரணம்.

Read More

மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்டன திருநெல்வேலிக்கும் திருநெல்வேலிக்குள்ளும் பயணம்செய்து. எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்கள் ‘திருநெல்வேலிக்கு நீங்க வர…’ என்று தான்ஆரம்பித்தார், என்ன ஏது, எப்போது எதுவுமே கேட்டுக்கொள்ளவில்லை. ‘வர்றேன் சார்’என்றேன். பிறகு தான் மற்ற விவரமெல்லாம் கேட்டுக் கொண்டேன். முதல் நாள்திருநெல்வேலியில் புத்தகக் கண்காட்சியிலும் அருகில் இருந்த ஜிகர்தண்டா கடையிலும், மதுரம்உணவகத்திலும் கழிந்தது. கல்லூரித் தோழிகளும், சமூக வலைதளங்களில் அறிமுகம்ஆனவர்களும், எனது மதிப்பிற்குரியவர்களையும் சந்திக்கும்

Read More

திருநெல்வேலி தாண்டி கருங்குளம் தொட்டதும் ஒருபக்கம் தாமிரபரணி உடன் வந்து கொண்டே இருந்தது. அகலம் குறைந்த பொருநை அங்கு. அந்த நதியின் சிறப்பே உபரி நீர் மட்டுமே கடலில் சேரும் என்பதும் தான். பயன்பாட்டுக்கு பிறகான நீரே கடலடையும். கடைசி அணையான ஸ்ரீவைகுண்டத்துக்கு முன்பு செய்துங்கநல்லூருக்குப் பிறகு இடதும் வலமுமாக விரிந்திருக்கும் நிலம் ஆதிச்சநல்லூர். அங்கு பாண்டிராசா கோயிலும் சுட்ட செங்கற்களால் உருவாக்கப்பட்ட பல நூற்றாண்டு படித்துறையும் தான் கட்டடங்கள்.

Read More

இருபது வருடங்கள் கழித்தும் ஒரு ஆவணப்படம் நம்மை பேச வைக்கிறது. தேம்ப வைக்கிறது, அமைதியாக்குகிறது, தோளைத் தட்டிக் கொடுக்கிறது. இதனைத் திட்டமிட்டே செய்திருக்கிறார் ரான் ஃபிரிக். இவர் Baraka ஆவணப்படத்தின் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர். இந்தப் படத்தைப் பார்ப்பது ஒரு உள்ளார்ந்த அனுபவம். எந்தத் தொந்தரவுமின்றி இருளின் நடுவில் படத்தைப் பார்க்கும் எவரும் தன்னை அதனுடன் ஒப்புவித்து விடுவார்கள். இந்தப் பேரண்டத்தில் தான் ஒரு

Read More

ரயான் கூக்ளர் மார்வெல் ஸ்டூடியோவுக்கு படம் இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்தினை இடுகிறார். மார்வெல் நிறுவனத்துக்கும் கூக்ளருக்கும் மறக்க முடியாத தினமாக அது பதிவாகிவிட்டது. இந்தத் தயாரிப்பு நிறுவனம் முதன்முறையாக இளம் இயக்குனர் மேல் நம்பிக்கை வைத்து பெருங்கதையை சொல்ல நினைத்தது. அது அந்தக் கதையின் மீதான நம்பிக்கை மட்டுமல்ல, கூக்ளர் அந்தக் கதையை மிகச்சரியாக, உணர்வுப்பூர்வமாக காட்டிவிடுவார் என்பதில் கொண்டிருந்த நம்பிக்கை அது.

Read More

ஜோர்டான் பீல் வெகு காலமாக அமெரிக்கர்களின் செல்லப்பிள்ளையாக இருக்கிறார். தொலைகாட்சிகளில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை பல வருடங்களாக தொடந்து வெற்றிகரமாக இயக்கியும், நடித்தும் வந்தவர் 2008 ஆம் ஆண்டு அவற்றை விட்டு விலகினார். ஆனாலும் தனது தயாரிப்பு நிறுவனம் வழியாக தொடர்ந்து நகைச்சுவை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்தபடி இருக்கிறார். அதோடு இயக்குனர் ஸ்பைக் லீ இயக்கிய Blackkksman திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரும் ஆனார்.

Read More