HomeView All Posts (Page 8)

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த இருபது ஆண்டுகளாய் ஒரு பழக்கம் தொற்றிக் கொண்டுள்ளது. சின்னச்சிறிய கிராமங்கள் தங்களின் ஜாதி அடையாளத்தை ஊரின் முகப்பிலேயே காட்டிவிடுவது பல கால வழக்கம் தான் என்றாலும் இப்போதைய நவீன வடிவமாய் அதற்கான முகமாய் நடிகர்களை வரித்துக் கொண்டிருக்கின்றனர். ஊரின் நுழைவாயிலில் சாதித் தலைவர்களின் சிலைக்கு அருகிலேயே அவர்கள் சாதியைச் சேர்ந்த நடிகர்களின் படம் வரையப்பட்டிருக்கிறது.

Read More

இவர்கள் மேல் எப்போதும் ஒருவித நாற்றம் இருந்து கொண்டே இருக்கும். நீங்கள் இதனை எப்படி புரிந்து கொள்வீர்கள்? அவர்களுடைய இடங்கள் எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரிய வேண்டுமில்லையா?அதனால் இவர்களைப் பற்றிய கதையைத் தான் எடுக்க நினைத்தேன்

Read More

சிதறிக்கிடந்த ரோஜா இதழ்கள் காலில் மிதிபடாமல் நடக்க வேண்டும் என கவனமாக எட்டு வைத்தாள் மணிமாலா. ரோஜாவும் மல்லிகையும் அவளுக்குப் பிடித்தமான மலர்கள். அதன் வாசனைகள் அவளின் கனவுகளில் துரத்தக்கூடியவை. வாசனை துரத்தும் இரவுகளின் விடியலில் அவள் மல்லிகையை சூடிக்கொள்ள நினைத்திருக்கிறாள். இதை அவள் நாதனிடம் சொல்லியதில்லை. சொன்னால் அடுத்த கணமே வாங்கித் தரக்கூடியவன் தான் என்றாலும் மணிமாலாவுக்கு சொல்லத் தோன்றியதில்லை.

Read More

ஒரு பேருந்து பயணம். குறிப்பிட்ட நேரம் கடந்தும் பேருந்து ஊர் போய்ச் சேரவில்லை. பயணிகளான எங்களுக்கு மிகுந்த சோர்வும் எரிச்சலும் ஏற்பட்டிருந்தது. திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டியிருந்த தம்பதியினர் எங்கள் பேரூந்தில் இருந்தனர். அவர்களுக்கு முகூர்த்த நேரம் முடிந்துவிடுமோ என்கிற தவிப்பு இருந்தது. ஓட்டுனர் எது குறித்த கவலையுமின்றி அவர் போக்கில் பேருந்தை நடக்கவிட்டுக் கொண்டிருந்தார்.

Read More

ஒரு புத்தக அறிமுக விழாவில் ரொமிலா தாப்பர் புத்தகம் விற்பனையில் இருப்பதைப் பார்த்தேன். அதுவரை இவரைக் குறித்த நூல் தமிழில் வெளிவந்திருக்கிறது என்று தெரியாமல் இருந்திருக்கிறேன். பெரும் ஆர்வத்துடன் வாங்கினேன். ரொமிலா தாப்பரின் கட்டுரைகளையும் சோமநாத் படையெடுப்பு குறித்து அவர் எழுதிய புத்தகத்தையும் மூன்று வருடங்களுக்கு முன்பு வாசித்திருக்கிறேன். சோமநாத் படையெடுப்பு பற்றிய புத்தகத்தினை அநேகமாக வாசிப்பதற்கு ஆறு மாதங்கள் வரை ஆகியிருந்தது. காரணம்,

Read More

எம்.டி வாசுதேவன் நாயர் எழுதிய திரைக்கதைகளுள் ஒன்று பெருந்தச்சன். அவர் எழுதிய திரைக்கதை வடிவம் ஸ்ரீபதி பத்மநாபன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தக வடிவமாக கிடைக்கிறது. புது எழுத்து பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. பதினைந்து வருடங்களுக்கு முன்பு முதன் முதலாக ‘பெருந்தச்சன்’ படத்தினைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது பார்த்த மனநிலைக்கும் இப்போது பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. இலக்கியம் படைப்பவர்கள் வேறு திரைக்கதை ஆசிரியர்கள் வேறு,

Read More

குதிரை கனைக்கும் அரவம் மிக அருகில் கேட்டது. பேச்சி உள்ளுக்குள் பதறி எழுந்தாள். எதிரில் எண்ணெயில் மினுங்கிய குதிரை நின்று கொண்டிருந்தது. ஆராட்டப்பட்ட மஞ்சள் நீர்த்துளிகள் இன்னும் அதன் மீது உலர்ந்திருக்கவில்லை. சந்தனமும், பூவுமாக உடலில் வாங்கியிருந்தது. பேச்சிக்கு கல் குதிரை கனைத்திருக்காது என்று தெரியும். ஆனாலும் அதையே பார்த்தாள். அது தன் முகத்தை எஜமானியின் திசை நோக்கி கொடுத்திருந்தது. செதுக்கப்பட்ட அதன்

Read More

எங்களுடைய ஊரில் ஒரு உப்பு வியாபாரியை அடிக்கடி பார்த்திருக்கிறேன். உமணர் என்கிற பண்பாட்டு பெயர் அவருக்கு உண்டு என்பதை சங்க இலக்கியத்தின் வழி தெரிந்துகொண்டேன். கல் உப்பு மட்டுமே விற்கக்கூடியவர். ஒற்றை மாடு பூட்டிய வண்டியில் வருவார். திருநெல்வேலி நகரின் சில பகுதிகளுக்கு மாதம் இருமுறை வருவது அவர் வழக்கம். உப்பு மிக அவசியமான ஒன்று. ஆனாலும்கூட அதனைக் கடைகளில் நாங்கள் வாங்கியதில்லை.

Read More

தொடர்ந்து இந்தியா முழங்கிக்கொண்டிருக்கிறது. இந்த நொடி கூட இந்தியாவின் தலைநகரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் குரல்கள் அடங்கியிருக்கவில்லை. குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு இரண்டுக்குமான எதிர்ப்பு குரல்கள் இளைஞர்களிடமிருந்து வலுவாக வெளிவந்திருக்கிறது. குறிப்பாக பெண்களிடமிருந்து வெளிப்படும் குரல்கள் தேசத்தை அதிரவைக்கின்றன. மிக அழுத்தமான வாசகங்களைக் கொண்ட பதாககைகளுடன் அவர்கள் நீண்ட நேரம் தங்கள் குரல்களை அரசின் அவசரமான சட்டத்துக்கு எதிராகக் கொடுக்கின்றனர்.

Read More

ஏக்நாத் அவர்கள் எழுதிய ‘வேசடை’ நாவல் படித்து முடித்திருக்கிறேன். ஏக்நாத் அவர்களின் படைப்புகள் எனக்குப் பிடிக்கும். அவர் திருநெல்வேலியைப் பற்றி எழுதுகிறார் என்பது தொடக்கக் காரணமாக இருந்தாலும் ஒரு வசதிக்காக அவர் தான் வாழ்ந்த அம்பை, பாபநாசம் பகுதிகளை எடுத்துக் கொள்கிறார். அது அவர் வாழ்ந்த நிலம். அவர் காட்டுகிற மனிதர்களும் அவர்களது கதைகளும் நிலம் கடந்தவை.

Read More