HomeView All Posts (Page 7)

நீரும் நெருப்பும் என்று தான் சொல்ல வேண்டும் நீரோடலையும் பெண்களை. நெருப்பை நீர் அணைப்பது போல நீரை நெருப்பாய் அணைக்க பெண்களால் முடியும். பிறந்ததிலிருந்து சென்னை வருவது வரையிலான இருபதாண்டு காலத்தை நீர்நிலையின் அருகிலேயே கழித்திருக்கிறேன். காலெட்டும் தூரத்தில் தாமிரபரணி போல ஒரு நதியை வைத்துக் கொண்ட பெண்களுக்கு நீர் என்பது வெறும் தண்ணீர் மாத்திரமே அல்ல. தண்ணீர் குடம் என்றாலே அதைத் தூக்கும்

Read More

கடை ஒன்றிற்கு சென்றிருந்தபோது அங்குள்ள தொலைக்காட்சிப் பெட்டியில் தொடர் ஒன்று ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அது பெண்கள் மட்டுமே வேலை செய்யும் தையலகம். மூன்று பெண்கள் தைத்தபடியே அவ்வப்போது நிமிர்ந்து தொலைகாட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தத் தொடரில் ஒரு இளம்வயதுப் பெண் தன்னுடைய அம்மாவிடம், ‘மத்தப் பொண்ணுங்க மாதிரி நான் சராசரியா வாழமாட்டேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். இந்த வசனத்தைக் கேட்டதும் மூன்று பெண்களுமே

Read More

உறவு முறையில் அத்தை ஒருவரை பார்க்கப் போயிருந்தேன். அத்தை செய்திதாள்கள், பத்திரிக்கைகள் படிக்கும் ஆர்வமுள்ளவர். இதனை முன்னிட்டு நீங்கள் அவரிடம் ‘பிரதமர் மோடி இப்போது எந்த நாட்டில் இருக்கிறார்?” என்று கேட்டுவிடக்கூடாது. ‘அவர் எந்த நாட்டுக்குப் போனா நமக்கென்ன, அதைக் கொண்டு ஒருவேளை சாப்பாடு கிடைக்குமா?” என்பார். என்றுமே அவர் செய்தித்தாளின் முதல் பக்கத்தைப் பார்த்ததேயில்லை. ‘தங்கம் விலை எவ்வளவு?’, ‘கொலை’, ‘கொள்ளை’,

Read More

எல்லாக் கதைகளும் சொல்லியாகிவிட்டன. புதிதாய் இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை. துயரங்கள் அனைத்தும் இன்று காலாவதியாகிவிட்டன. அமெரிக்கா மாற்றம் கொள்ளத் தொடங்கிவிட்டது. ஒரு கறுப்பர் அமெரிக்காவின் ஜனாதிபதியாகவே ஆகிவிட்டார்..எல்லாம் மாறிவிட்டன இனி பழைய பாணியில் அடிமைகளாக இருந்த கதையை சொல்லும் நிலையில் இல்லை என்பது தான் ஆப்ரிக்க அமெரிக்கப் படங்கள் குறித்த பேச்சாக இருந்தது. அப்போது தான் இந்தப் படம் வெளியாகிறது – Django

Read More

தமிழ் சினிமாவின் வரலாற்றில் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய ஒருவர் இயக்குநர் எஸ்.பாலசந்தர். எல்லோரும் ஒருவழிப்பாதையில் சென்று கொண்டிருக்கும்போது தனக்கென ஒன்றினை உருவாக்கிக் கொண்ட முதல் இயக்குநர் என்று சொல்லலாம். இப்படிச் சொல்லக் காரணமுண்டு. தமிழ் சினிமா இன்றும் கூட காட்சிரீதியிலான கதை சொல்லலை முழுமையாகக் காட்டிக்கொள்ளவில்லை. அறுபது வருடங்களுக்கு முன்பு படங்களை இயக்கத் தொடங்கிய எஸ்.பாலசந்தர், ஒளியில் நம்மை வசியப்படுத்தியிருக்கிறார்.

Read More

புகைப்படம் நன்றி : வினோத் பாலுசாமி ‘ஜேன் அயர்’ என்கிற ஒரு நாவல். இந்த நாவலைத் தழுவி ஹாலிவுட்டில் ஒரு படம் எடுக்கப்பட்டது. அந்தப் படத்தின் பெயர் Sound of Music. இந்தப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது தான் தமிழில் வெளிவந்த‘சாந்தி நிலையம்’.  காஞ்சனாவும் ஜெமினி கணேசனும் நடித்திருப்பார்கள். இந்தப் படத்தின் நாயகியான காஞ்சனாஒரு ஆசிரியையாக கதாபாத்திரம் ஏற்றிருப்பார். மிகவும்பொறுமைசாலி என்பதான பாத்திரம். அன்பால்அனைத்தையும்

Read More

செல்லா அமர்ந்திருந்தாள். ஓடி வந்த களைப்பில் தலைசாய்த்தாள். பெருமூச்சுகளாக வெளிவந்து கொண்டிருந்தன. அவள் தலை சாய்த்திருந்தது நான்கைந்து வருடங்களுக்கு முன்பு மரணித்திருந்த கனியம்மாவின் சிமென்ட் பூசப்பட்ட மடியில். கனியாம்மாவை செல்லாவுக்குத் தெரியாது. செல்லா அந்த ஊருக்கு புதியவள். கனியம்மா நிலைத்து வாழ்ந்து மடிந்தவள். செல்லா புடவையின் வியர்வை நசநசப்பில் இருந்து விடுபட வேண்டி கால்களை நீட்டினாள். கால்கள் எதிரில் கிடந்த மற்றொரு

Read More

அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள் கடந்த ஏப்ரல் மாதம் The Caravan இதழ் திரு.அம்பேத்கர் குறித்து ஒரு நீண்ட ஆய்வுக்கட்டுரை வெளியிட்டிருந்தது. அம்பேத்கரின் எழுத்துகள் குறித்த கட்டுரை அது. இப்படி சொல்வதைக் காட்டிலும் இன்று அவர் எழுத்துகளை நாம் வாசிப்பதற்கு முன்பாக அவரும் அவர் எழுத்துகளும் பட்ட சிரமங்களைச் சொல்கிற கட்டுரை என்று கூறவேண்டும்.

Read More

அரசியலை கொஞ்சம் ஒதுக்குவோம். இவர் மேல் விமர்சனங்கள் வைக்கும் எவருமே இவரது தைரியத்தையும், துணிச்சலையும் ஏதாவது ஒரு கட்டத்திலாவது வியந்திருக்கிறார்கள்.  அரசியல் எதிரிகளே சில நேரங்களில் அசந்து போகிற தன்மையாக இருக்கிறது முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் அசாத்திய போராட்ட குணம். நகரம் மற்றும் கிராமத்துப் பெண்கள், புதிதாய் வேலைக்கு வந்தவர்கள், வரப்போகிறவர்கள், குடும்பத் தலைவிகள் என பலருக்கும் இவரது இந்த குணம் முன்னுதாரணம்

Read More