HomeView All Posts (Page 5)

ஒரு இயக்குனர் தொடர்ந்து வெற்றிப் படங்களை இயக்குவதென்பது அரிதல்ல. ஆனால், தன்னுடைய பாணி எது என்பதைத் தெரிந்து கொண்டு அதைக் கொண்டே தொடர்ந்து படம் இயக்கி வெற்றி பெறுவதென்பது அரிது. ஒரு திரைப்படத்தை உருவாக்க அடிப்படையான திரைக்கதை, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் இவற்றில் எல்லாம் திறன் வாய்ந்தவர்கள் ஒன்று சேரும்போது படம் வெற்றி பெறும். இவையெல்லாம் அறிந்த ஒருவர் திறனும் வாய்க்கப் பெற்றிருந்தால்..அப்படித்

Read More

‘ஆண்பாவம்’ படத்தை, முதலில் எப்போது பார்த்தேன் என்பது எனக்கு நினைவில்லை. இது பற்றி எனக்குக் குறையொன்றுமில்லை. பிடித்த பலவற்றின் தொடக்கமும் நமக்கு நினைவில் இருப்பதில்லை. ஆனால் வாசுதேவநல்லூர் ராமகிருஷ்ணா டாக்கீஸில் தான் முதன்முதலில் பார்த்தேன் என உறுதியாகச் சொல்ல முடியும். முப்பத்திஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் வளர்ந்த ஊர் அது. அங்கிருக்கும் ரசிகர்களின் ஒரே கனவுப்பெட்டி ‘ராமகிருஷ்ணா’ தான். இந்தப் படம் பார்த்தபோது

Read More

கஸுஹிரோ சூஜி  (Kazuhiro Tsuji)  ஜப்பானிய ஒப்பனைக் கலைஞர். உலகின் புகழ்பெற்ற சிற்பி. முகம் என்பது ஆழ்மனதின் வெளிப்பாடு என்பதை தனது  கலையாகவே கொண்டிருக்கிறார். ஜப்பான் மற்றும் ஹாலிவுட்டின் பல படங்களுக்கு ஒப்பனைக் கலைஞராக பணி செய்தவர். டிக் ஸ்மித் உள்ளிட்ட ஒப்பனைக் கலையில் ஆளுமைமிக்கவர்களுடன் உதவியாளராக பணி செய்திருக்கிறார்.  இவரது படங்களின் பட்டியல் இவரின் சாதனைகளை சொல்கிறது. Planet of the

Read More

தூரத்தில் ஒலிக்கும் கண்டாமணி தனது இசையை நிறுத்தியபின் நம் மனதுக்குள் ஒரு அதிர்வு ஏற்படும், அந்த அதிர்வின் குரல் தான் வாணி ஜெயராமினுடையது. சில குரல்கள் சிலவற்றை நமக்கு நினைவுபடுத்தும். எனக்கு வாணியின் குரல் ஏனோ இனிய அதிர்வை நினைவுபடுத்தியபடி இருக்கிறது. நிச்சயமாக தனித்துவ குரல். இந்தக் குரல் அவர் கடுமையான பயிற்சியினால் கொண்டு வந்தது. திருமணத்துக்கு முன்பு கர்நாடக சங்கீதம் பயின்றிருந்த

Read More

உயிரோட்டமான காட்சிகள், தேர்ந்த திருப்பங்கள் போன்றவை திரைக்கதை எழுதுவதற்கான அம்சங்களில் சில என்றால் இயக்குனர் சாரா பாலியின் வாழ்க்கை இதற்குள் கச்சிதமாகப் பொருந்தும். இதனைப் பலரும் சாராவிடம் சொல்லியிருக்கின்றனர். தனது வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கும் ஆர்வம் இல்லாவிட்டாலும் அதன் ஒரு பகுதியை ஆவணப்படமாக எடுத்திருக்கிறார். அந்த ஆவணப்படத்தின் மையம், சாராவின் அம்மாவைச் சுற்றியே சுழல்கிறது. சாரா பாலி கனடாவிலும், ஹாலிவுட்டிலும் பிரபலமான நடிகை. சிறந்த

Read More

கிறிஸ்டோபர் நோலனின் படங்களின் பிரம்மாண்டம் கதைக்குள் ஒன்றியது, சாத்தியமற்ற கனவை நம் முன் நிகழ்த்திக் காட்டுவது. நோலன் தன்னுடைய கற்பனையின் எல்லையை எத்தனைத் தூரம் கடந்தாலும் அவருக்கு உறுதுணையாக இருப்பவர் அவருடைய கலை வடிவமைப்பாளர் நாதன் க்ரௌலி. க்ரௌலியின் அப்பாவும் தாத்தாவும் கட்டட வடிவமைப்பாளர்கள். க்ரௌலியின் அப்பா அவருக்காக கட்டித் தந்த கண்ணாடியிலான மாளிகையிலேயே இளமைக் காலத்தைக் கழித்தவர் க்ரௌலி. ஒரு சிறந்த

Read More

தமிழ்ச்சிறுகதைகளுக்கும், தமிழ்த் திரைப்படங்களுக்கும் ஒரு சேர நூற்றாண்டினைக் கொண்டாடிக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். இந்த நூறு ஆண்டுகளில் இரண்டுமே அதனதன் பாதையில் வளர்ச்சி கண்டுள்ளன. வடிவங்களை மாற்றிக் கொண்டிருக்கின்றன, கூடவே அது தரும் அனுபவங்களும் தான். தமிழில் இத்தனை ஆண்டுகாலம் எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் எண்ணிக்கை என்பது அளவிட முடியாதது. ஒவ்வொரு கதையுமே ஒரு வாழ்க்கையைப் பேசுகின்றன, சம்பவங்களை உணர்த்துகின்றன, போதிக்கின்றன. ஆனாலும் கூட ஏன் கதை பஞ்சம்

Read More

ஹன்னா பீக்லரின் (Hannah Beachler) அப்பா கட்டட வடிவமைப்பாளர். பீக்லரின் உலகம் வடிவங்களால் ஆனது. அப்பாவுக்கு தொழிலில் உதவுவதற்காகவே கட்டடக்கலை படித்தார். பிறகு ஆடை வடிவமைப்பு குறித்து தொடர்ந்து பயிற்சி பெற்றார். அவருடைய ஆர்வம் திரைப்படங்களில்  பணிபுரிவதை நோக்கித்  திரும்பியது. திரைப்படங்களில் காட்டப்படும் உலகத்தை ஒரு கலை இயக்குனர் தான் உருவாக்குகிறார் என்பது பீக்லருக்கு சுவாரஸ்யம் தருவதாக இருந்தது. அதை முயற்சி செய்து

Read More

திருநெல்வேலிக்கு வரும் வெளியூராட்களை அந்த ஊர்க்காரர்கள் பெருமையுடன் இழுத்துக் கொண்டு போவது பாபநாசத்துக்குத் தான்.. வளைந்த மலைப்பாதைகளில் ஏறினால் கீழே சுழித்தோடும் அகண்ட தாமிரபரணி மேல் பாபநாச சிவன் உட்கார்ந்திருப்பார். வாசலில் இருந்தே ஒரு கும்பிடு போட்டுவிட்டு மீண்டும் மலையேற்றம். காரையார் அணைக்கட்டு வரும். அந்த அணைக்கட்டின் மேல் படகில் ஏறி அந்தக்கரை சென்றால் ‘ரோஜா’ படத்தில் மதுபாலா குளித்த அருவி வரும்.

Read More

வால்ட்டர் முர்ச் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக ஒலி வடிவமைப்பு மற்றும் படத்தொகுப்பாளராக பணி செய்து வருகிறார். இவரளவுக்கான அனுபவம் வேறெந்த படத்தொகுப்பாளருக்கும் இல்லை. The Godfather, The conversation, Apocalypse Now, The English Patient போன்ற படங்கள் இவர் பணி செய்ததில் குறிப்பிடப்பட வேண்டியவை. படத்தொகுப்பு பற்றிய எந்தக் கேள்விக்கும் எளிமையாக பதில் சொல்லக் கூடியவர். படம் மற்றும் ஒலித் தொகுப்புக்கான உயரிய

Read More