HomeView All Posts (Page 3)

கல்லூரியில் தொடர்பியல் மேற்படிப்புப் படித்துக் கொண்டிருந்த காலகட்டம். ஒவ்வொரு புதன்கிழமையும் மதியம் ஒரு படத்தைத் திரையிடுவார்கள். எந்தப் படம் என்பது திரையிடலுக்கு முந்தைய நிமிடம் தான் தெரியும்.பெரும்பாலும் அயல் நாட்டு திரைப்படங்கள் அலல்து வங்காள மொழிப் படங்களாகவே இருக்கும். படத்தை சீனியர் மாணவர்களில் ஒருவர் தேர்ந்தெடுத்து திரையிட வேண்டும். ஏன் அந்தப் படத்தைத் திரையிடலுக்குத் தேர்ந்தெடுத்தேன் என்பதையும் அவர் ஒரு நிமிட நேரத்தில்

Read More

ரேகா ஒன்பது வருடங்களுக்கு முன்பு இதே நாளில் அறுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார். இதை வேறுவழியில்லாமல் பாலிவுட் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஏனென்றால் இன்றைக்கும் இந்திய சினிமாவில் ரேகா ‘வயது ஏறாத தேவதை’ தான். அவரை இன்னும் கனவுகன்னியாக நினைக்கிறார்கள். நடிக்க வந்த காலகட்டத்தில் இருந்தே அவரைப் பற்றி வந்த வதந்திகளும், பிரச்சாரங்களும் இன்னும் ஓயவில்லை. யாருக்கும் அவ்வளவு சீக்கிரத்தில் பேட்டியோ, சந்திப்பையோ ஏற்படுத்தித் தராத ரேகா

Read More

தமிழ் சினிமாவின் ‘ட்ரெண்ட் செட்டர்களுள்’ ஒருவராக இயக்குனர் தாதா மிராசியைச் சொல்ல முடியும். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். மேற்கு வங்கம் எப்போதுமே அதன் நாடகங்களுக்கும் இலக்கியத்துக்கும் பெயர் பெற்றது. இலக்கியத்தில் இருந்து திரைப்படங்களை நமக்குத் தந்துகொண்டிருப்பது. தாதா மிராசியின் படங்களில் இவற்றையெல்லாம் பார்க்க இயலும். படங்கள் இயக்குவதற்கு முன்பாக இவர் திரைக்கதை மட்டுமே எழுதிய படங்கள் வெளிவந்திருக்கின்றன. இவருடைய படங்களில் ஒரு  முழுமையான

Read More

2010 ஆம் ஆண்டு. ஒருநாள் எழுத்தாளர் ஆர். சூடாமணி மறைந்த செய்தி தெரிய வந்த அன்று முதலில் ஏற்பட்டது வருத்தம் என்பதை விட குற்றஉணர்வு தான். ஒருவர் நம்மைவிட்டுப் பிரியும்போது பல நேரங்களில் நம்மிடையே ஏதேனும்  குற்றஉணர்வினைத் தந்துவிட்டே செல்கிறார்கள். அவரைச் சந்தித்திருக்கலாம், அவருடன் தொலைபேசியில் பேசியிருக்கலாம், அவர் கேட்ட உதவியை செய்திருக்கலாம் இப்படி ஏதேனும் தோன்றிவிடுகிறது. சூடாமணியைப் பொறுத்தவரை எனக்குள் எழுந்த

Read More

சில வருடங்களுக்கு முன்பு மாறுவதற்காக வீடுகள் பார்த்துக் கொண்டிருந்தோம். அதில் இரண்டு வீடுகள் எங்களுக்கு நம்ப முடியாத அமைப்பினைக் கொண்டிருந்தன. இனி வரும் காலத்துக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட வீடுகளா அல்லது ஒரு கட்டாயத்தை நோக்கி நம்மைத் தள்ளும் அவசரமா என்று புரியவில்லை. அதில் ஒரு வீடு, நகரின் பிரதான ஓடத்தில் அமைந்திருந்தது. வெளித்தோற்றமும், மற்ற வசதிகளும் நிறைவைத் தந்திருந்தன. ஆனால் வீடு முழுவதும்

Read More

இது 115 வருடத்துக்கு முன்பு கேரளாவில் நடந்த சம்பவம். இப்போது வரை அதன் பாதிப்பு கேரள மக்களின் மனங்களில் தங்கியிருக்கிறது. இன்றைக்கும் கூட பெண்கள் தனக்கு நேர்ந்த சாதாரண பிரச்சனைகளைக் கூட வெளியில் சொல்லத் தயங்கிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நூற்றாண்டுக்கு முன்பு நடந்த ஒரு உண்மைச் சம்பவம் நமக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும். பிரமிப்பையும் தந்து கொண்டிருக்கிறது. கேரளாவில் உள்ள அனைவருக்கும் பரிச்சயமான ஒரு

Read More

தமிழின் அழகான வார்த்தைகளில் ஒன்று மௌனம். சொல்லும்போதே ஒரு அமைதி வந்துவிடுகிறது. ஆனால் என்னவோ மௌனம் என்பது ஆன்மிகத்துடனும், பெண்களுடனுமே அதிகம் தொடர்புகொள்ளப்படுகிறது. ஆனால் இரண்டுக்கும் இடையில் தான் எத்தனை பெரிய வேறுபாடு!! நிறைவே மௌனம் என்கிறது ஆன்மிகம். மனப் போராட்டத்தையும் எதிர்ப்பையும் காட்டுவதற்கு பயன்படுத்தும் ஆயுதமாய் மௌனத்தைக் கொண்டிருக்கின்றன பல பெண்களின் மனநிலை. மௌனம், அமைதி, அடக்கம் போன்றவையெல்லாம் பெண்களோடு பிறந்தேயாக வேண்டிய

Read More

சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து குடும்பத்தோடு நாகர்கோயில், கன்னியாகுமரி கேரளா பகுதிகளுக்கு சென்றிருந்தோம்.  பயணத்திற்கான ஏற்பாடுகளில் ஒன்றாக சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் மற்றும் நாகர்கோயில் நாகராஜா கோயிலும் இடம்பெற்றிருந்தது. இதற்கு முன்பு அங்கெல்லாம் சென்றிருந்தாலும் அந்த முறை நான் சென்றபோது கிடைத்த அனுபவம் வேறாக இருந்தது. காரணம் இந்த இரண்டு கோயில்கள் குறித்தும் நான் வாசித்திருந்த புத்தகங்கள் தான். தாணுமாலயன் கோயில் குறித்த

Read More

“நீ சிலரை சில நேரங்களில் முட்டாளாக்கலாம் எல்லா நேரங்களிலும் எல்லோரையும் முட்டாளாக்க முடியாது எங்களுக்கு வெளிச்சம் தெரிகிறது எங்கள் உரிமைகளுக்காக நாங்கள் எழுந்து நிற்போம் Get Up Stand Up for your Right” என்கிற பாப் மார்லியின் பாடலைக் கேட்டிருப்போம். இந்தப் பாடலின் தொடக்கத்தில் ஒரு தாள இசை வரும். அது ஒரு துள்ளலான இசை. அது ஒரு அழைப்புக்கான இசையும் கூட. ஆயிரம் வார்த்தைகளில் ஆற்றக்கூடிய சொற்பொழிவுகளைக்

Read More

டேவிட் க்ரோனன்பெர்க் (David Cronenberg) கனடா நாட்டு இயக்குனர். முற்றிலும் வித்தியாசமான படைப்புகளைத் தந்திருப்பவர். பள்ளிக்கூட காலகட்டத்திலேயே கதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பி வைப்பார். அவை யாவும் விஞ்ஞான புனைவு இதழ்கள். அறிவியலின் மேல் கொண்ட நாட்டம் காரணமாக ஆராய்ச்சிப் படிப்பினை மேற்கொண்டிருந்தார். மிகத் தற்செயலாகத் தான் திரைப்படத் துறைக்கு அவர் நுழைந்தார். தன்னுடைய அதீத கற்பனைக்கு திரைப்படம் எந்த வகையில் உதவி

Read More