HomeView All Posts (Page 2)

(சமீபத்தில் வெளியான எனது 'மாபெரும் சபை' புத்தகத்தின் முன்னுரை) தமிழ் சினிமா பல்வேறு பரிட்சார்த்த முயற்சிகளை செய்துள்ளது. ஒரு நீண்ட பயணம் அதற்குண்டு. எந்தச் சாதனையையும் செய்கிற ஆர்வம் கொண்டது தமிழ்த்திரை. கற்பனைத்திறனும், தொழில்நுட்பமும், கலைஞர்களின் தொடர் வரவையும் தன்னிடத்தில் உள்ளடக்கியது. இவற்றையெல்லாம் தொகுத்து சினிமா பத்திரிகைகள், புத்தகங்கள், ஆய்வுகக்கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. இதற்காகவே வாழ்நாளை செலவழித்தவர்களும் இருக்கிறார்கள். இப்படி ஒரு துறை பற்றித் தொடர்ந்து

Read More

அப்பாலே போகும் யாத்ரீகன் “எளிமை தான் மிகக் கடினமானது” – மார்டின் ஸ்கார்சிஸ் கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக சினிமாவுக்காக நின்று நிதானமாக உழைத்துக் கொண்டிருக்கிறார் மார்டின் ஸ்கார்சிஸ் (Martin Scorsese). இப்படித்தான் இவரது படம் இருக்கப்போகிறது என்று கணிப்பதற்குள்ளாகவே வெவ்வேறு தளங்களில் கதையை நகர்த்திச் சென்று விடுபவர்.   வன்முறையை மையமாக வைத்து படம் எடுக்கிறார் என்று இவரைப் பற்றிப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும்போது பதினான்காவது தலாய்

Read More

எஸ்.எஸ். வாசன் இயக்குநராகவும் வெற்றி பெற்றவர். ஒவ்வொரு படத்திலும் சாதனைகள் செய்தே தீருவேன் என்று ஒருவர் படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படியான படங்கள் தான் எஸ்.எஸ்.வாசன் இயக்கியதும் தயாரித்ததுமானவை. ஒரு தயாரிப்பாளராக அவர் சினிமாவின் போக்கினை மாற்றியிருக்கிறார். சினிமா என்பது வியாபாரம் என்றால், அது தன் எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என்கிற எண்ணம் கொண்டிருந்தார். வெறும் கதை சொல்லல் மட்டுமே திரைப்படமாகிவிட

Read More

தமிழில் அதிகம் கவனிக்கப்படாத, அதே நேரம் நவீன சிந்தனையுடன் படங்களை இயக்கியவர் A.T கிருஷ்ணசாமி. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். ‘சபாபதி’ என்கிற படம் 1941ல் வெளிவந்தது. எண்பது வருடங்களை படம் கடந்துவிட்டது. இப்போதும் தொலைகாட்சியில் அந்தப் படத்தினை ஒளிபரப்பும்போது ரசிக்கபப்டுகிற வரிசையில் உள்ளது சபாபதி. தமிழின் முதல் முழு நீள நகைச்சுவைத் திரைப்படமாக சபாபதியை சொல்ல முடியும். இப்போது பார்த்தாலும் சபாபதி நம்மை சிரிக்க

Read More

தமிழை வாசிக்கத் தெரிந்த ஒருவராய் இருப்பதின் பேறு சில எழுத்தாளர்களை படிக்கும்போது உணர முடியும். தமிழ் தெரியாமல் போயிருந்தால் கி. இராஜாநாராயணனை வாசிக்காமல் அல்லவா  இருந்திருப்பேன் என்று நினைத்துக் கொள்வேன். குறிப்பாக,அவரது எழுத்துக்களை வாசித்து முடிக்கும் ஒவ்வொரு தருணங்களிலும். கரிசல் நிலத்தின் வழக்காறுகளை அதன் இயல்பு மாறாமல் தருகிற செய்நேர்த்தியை அதே மொழியில் வாசிப்பது தானே அற்புதமான அனுபவமாக இருக்கும். ஆங்கிலத்திலும் மற்ற

Read More

(2016 ஆம் ஆண்டு ‘உலகை ஆளும் ராசாத்திகள்’ என்கிற ஒரு தொடரை தொடர் மல்லிகை மகள் இதழுக்காக எழுதினேன் வெளிவந்தது. அதில் இடம்பெற்ற ஒரு அத்தியாயம் இந்தக் கட்டுரை) ஐஸ்வர்யா ராய் என்கிற பெயர் இந்தியாவில் இருபத்தைந்து ஆண்டுகளாக தொடர்ந்து உச்சரிக்கப்படுகிறது. 1994ஆம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருந்த உலக அழகிப் போட்டியின் போது தான் உலகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே ஐஸ்வர்யா ராயின் பெயரே தெரியும்.

Read More

திருநெல்வேலியில் இருந்த இருபது வருட காலகட்டத்தில் மூன்று வீடுகள் மாறியிருப்போம். ஒவ்வொரு வீட்டிற்கும் மறக்க முடியாத நினைவுகள் பல உண்டு. ஆனால் சென்னை குடிவந்த பிறகும் காலை மணி ஆறு என்றடிக்கும்போது திருநெல்வேலி சிக்கநரசய்யன் கிராமத்தில் வசித்த வீடு நினைவுக்கு வந்துவிடுகிறது. அங்கு இருக்கும் முருகன் கோயிலில் காலை ஆறு மணிக்கு பக்திப் பாடல்களை ரிகார்டரில் போடுவார்கள். அது ஸ்பீக்கரின் வழியே வீடுகளுக்குள்

Read More

கடல் பார்த்து உட்கார்ந்திருந்தாள் நந்தினி. முதுகில் சுள்ளென்று எதுவோ பட்டது. திரும்பிப் பார்க்கையில் அவள் நிழல் மட்டுமே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தது. வலது புறத்தில் ஒரு வெள்ளைக் குதிரை. அதன் முதுகில் கறுப்பு நிறத்தில் ஒரு கனத்த சால்வை. அதன் மூக்கில் இருந்து முதுகு வரை தடித்த வார்ப்படங்கள். அதில் உருளையான சிறு மணிகள் தொங்கிக் கொண்டிருந்தன. அந்தக் குதிரை அவள் பார்த்த

Read More

ஒரே ஒரு திரைப்படம். அது காலங்கள் கடந்தும் பேசப்படுகிறது. இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு அமெரிக்க லைப்ரரி காங்கிரசில் இருந்த அதன் பிரதி டிஜிட்டல்மயமாக்கப்பட்டு மீண்டும் பார்வையாளர்களுக்குத் திரையிடப்பட்டது. எந்த ஒரு ஆப்ரிக்க அமெரிக்க திரைப்பட இயக்குனரிடம் அவரை பாதித்த படங்கள் என்று கேட்டால் அவர்கள் இந்தப் படத்தினை சொல்வார்கள். Daughter of the Dust என்பது படத்தின் பெயர். இயக்கியவர் ஜூலி டாஷ்.

Read More

தமிழகத் திரையில் பெரும் சாதனை செய்த ஒரு இயக்குனராக பீம்சிங் அவர்களைச் சொல்ல வேண்டும்.  இருபத்திநான்கு வருடங்களாக தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் படங்களை இயக்கியிருக்கிறார். வருடத்திற்கு குறைந்தது இரண்டு படங்கள் வரை அவரிடம் இருந்து நமக்குக் கிடைத்திருக்கின்றன. இப்படித் தொடர்ச்சியாக கால் நூற்றாண்டு காலங்கள் தவறாமல் படமெடுக்கும் இயக்குனர் இனி நமக்குக் கிடைப்பது அரிதிலும் அரிது. அவர் இயக்கியப் படங்கள் எப்போதும் ‘கிளாசிக்’

Read More