(சமீபத்தில் வெளியான எனது 'மாபெரும் சபை' புத்தகத்தின் முன்னுரை) தமிழ் சினிமா பல்வேறு பரிட்சார்த்த முயற்சிகளை செய்துள்ளது. ஒரு நீண்ட பயணம் அதற்குண்டு. எந்தச் சாதனையையும் செய்கிற ஆர்வம் கொண்டது தமிழ்த்திரை. கற்பனைத்திறனும், தொழில்நுட்பமும், கலைஞர்களின் தொடர் வரவையும் தன்னிடத்தில் உள்ளடக்கியது. இவற்றையெல்லாம் தொகுத்து சினிமா பத்திரிகைகள், புத்தகங்கள், ஆய்வுகக்கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. இதற்காகவே வாழ்நாளை செலவழித்தவர்களும் இருக்கிறார்கள். இப்படி ஒரு துறை பற்றித் தொடர்ந்து