தமிழை வாசிக்கத் தெரிந்த ஒருவராய் இருப்பதின் பேறு சில எழுத்தாளர்களை படிக்கும்போது உணர முடியும். தமிழ் தெரியாமல் போயிருந்தால் கி. இராஜாநாராயணனை வாசிக்காமல் அல்லவா இருந்திருப்பேன் என்று நினைத்துக் கொள்வேன். குறிப்பாக,அவரது எழுத்துக்களை வாசித்து முடிக்கும் ஒவ்வொரு தருணங்களிலும். கரிசல் நிலத்தின் வழக்காறுகளை அதன் இயல்பு
திரு நரேந்திர மோடி மத்தியில் ஆட்சிக்கு வந்தபிறகு ஊடகங்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது. மோடியின் ஆட்சிக்கு சாதகமான செய்திகளைச் சொல்லும் ஊடகங்கள் அரசால் அரவணைக்கப்பட்டன. அப்படியல்லாத ஊடகங்களின் பங்குகள் அரசுக்கு நெருக்கமானவர்களால் கைப்பற்றப்பட்டன. மிஞ்சினால் அமலாக்கத் துறையினரால் சோதனை செய்யப்பட்டன. ஊடகங்களில் பணிபுரிந்த
தி. ஜானகிராமன் அவர்களின் படைப்புகளில் அதிகம் கவனத்துக்கு வராத ஒரு படைப்பு ‘உயிர்த்தேன்’. தி,ஜானகிராமனின் ‘மோகமுள்’, ‘அம்மா வந்தாள்’ இரண்டும் வாசகர்களை எப்போதுமே உணர்ச்சி லயதுக்குள் சிக்க வைப்பவை. ஒரு படைப்பாளரின் உச்சபட்சமான மனநிலை வெளிப்படும் தருணம் சில படைப்புகளில் அமையும். ‘அம்மா வந்தாள்’ அப்படியான
அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள் கடந்த ஏப்ரல் மாதம் The Caravan இதழ் திரு.அம்பேத்கர் குறித்து ஒரு நீண்ட ஆய்வுக்கட்டுரை வெளியிட்டிருந்தது. அம்பேத்கரின் எழுத்துகள் குறித்த கட்டுரை அது. இப்படி சொல்வதைக் காட்டிலும் இன்று அவர் எழுத்துகளை நாம் வாசிப்பதற்கு முன்பாக அவரும் அவர் எழுத்துகளும் பட்ட சிரமங்களைச்
ஒரு புத்தக அறிமுக விழாவில் ரொமிலா தாப்பர் புத்தகம் விற்பனையில் இருப்பதைப் பார்த்தேன். அதுவரை இவரைக் குறித்த நூல் தமிழில் வெளிவந்திருக்கிறது என்று தெரியாமல் இருந்திருக்கிறேன். பெரும் ஆர்வத்துடன் வாங்கினேன். ரொமிலா தாப்பரின் கட்டுரைகளையும் சோமநாத் படையெடுப்பு குறித்து அவர் எழுதிய புத்தகத்தையும் மூன்று வருடங்களுக்கு முன்பு
ஏக்நாத் அவர்கள் எழுதிய ‘வேசடை’ நாவல் படித்து முடித்திருக்கிறேன். ஏக்நாத் அவர்களின் படைப்புகள் எனக்குப் பிடிக்கும். அவர் திருநெல்வேலியைப் பற்றி எழுதுகிறார் என்பது தொடக்கக் காரணமாக இருந்தாலும் ஒரு வசதிக்காக அவர் தான் வாழ்ந்த அம்பை, பாபநாசம் பகுதிகளை எடுத்துக் கொள்கிறார். அது அவர் வாழ்ந்த
வயல்காட்டு இசக்கி என்கிற புத்தகம். ஆய்வாளர் திரு அ.கா பெருமாள் எழுதியது. மூன்று நாட்களுக்கு முன்பு தான் புத்தகம் வாங்கினோம். புத்தகத்தின் தலைப்பு ஈர்த்ததால், முதல் கட்டுரை வாசிக்கத் தொடங்க, விடுவேனா என்று ஏறி உட்கார்ந்து கொண்டது. அடுத்தடுத்து கட்டுரைகளினால் கீழே வைக்க மனமில்லை. ஒரு
தல புராணம் என்கிற இந்தப் புத்தகத்தை வாங்கியவுடன் வாசிக்கத் தேர்ந்தெடுக்க இரண்டு காரணங்கள். ஒன்று முழுவதும் சென்னையைப் பற்றிய வரலாற்றைச் சொல்கிறது என்பது. மற்றொன்று இதனை எழுதிய பேராச்சி கண்ணன். தகவல் தொடர்பியல் படிக்கையில் என்னுடைய சீனியர் அவர். படிக்கிற காலத்தில் பேராச்சி கண்ணனுடன் எங்கள்