அப்பாலே போகும் யாத்ரீகன் “எளிமை தான் மிகக் கடினமானது” – மார்டின் ஸ்கார்சிஸ் கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக சினிமாவுக்காக நின்று நிதானமாக உழைத்துக் கொண்டிருக்கிறார் மார்டின் ஸ்கார்சிஸ் (Martin Scorsese). இப்படித்தான் இவரது படம் இருக்கப்போகிறது என்று கணிப்பதற்குள்ளாகவே வெவ்வேறு தளங்களில் கதையை நகர்த்திச் சென்று விடுபவர்.
ஒரே ஒரு திரைப்படம். அது காலங்கள் கடந்தும் பேசப்படுகிறது. இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு அமெரிக்க லைப்ரரி காங்கிரசில் இருந்த அதன் பிரதி டிஜிட்டல்மயமாக்கப்பட்டு மீண்டும் பார்வையாளர்களுக்குத் திரையிடப்பட்டது. எந்த ஒரு ஆப்ரிக்க அமெரிக்க திரைப்பட இயக்குனரிடம் அவரை பாதித்த படங்கள் என்று கேட்டால் அவர்கள் இந்தப்
“நீ இருக்கும் இடம் என்பதைக் கடந்து ஒரு உலகம் உள்ளது..அதை நோக்கிச் செல்லும் தகுதி உனக்கு உண்டு” “நீ இங்கிருந்து தான் வந்தாய்..இது உன்னுடைய இடம்” இந்த இரண்டு வாக்கியங்களுக்கும் ஒரு மெல்லிய வித்தியாசமே உண்டு. ஆனால் அந்த வித்தியாசம் உறுதியானது. நரம்பின் உறுதியைப் போன்றது. இந்த வித்தியாசத்தைக்
உயிரோட்டமான காட்சிகள், தேர்ந்த திருப்பங்கள் போன்றவை திரைக்கதை எழுதுவதற்கான அம்சங்களில் சில என்றால் இயக்குனர் சாரா பாலியின் வாழ்க்கை இதற்குள் கச்சிதமாகப் பொருந்தும். இதனைப் பலரும் சாராவிடம் சொல்லியிருக்கின்றனர். தனது வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கும் ஆர்வம் இல்லாவிட்டாலும் அதன் ஒரு பகுதியை ஆவணப்படமாக எடுத்திருக்கிறார். அந்த
கிறிஸ்டோபர் நோலனின் படங்களின் பிரம்மாண்டம் கதைக்குள் ஒன்றியது, சாத்தியமற்ற கனவை நம் முன் நிகழ்த்திக் காட்டுவது. நோலன் தன்னுடைய கற்பனையின் எல்லையை எத்தனைத் தூரம் கடந்தாலும் அவருக்கு உறுதுணையாக இருப்பவர் அவருடைய கலை வடிவமைப்பாளர் நாதன் க்ரௌலி. க்ரௌலியின் அப்பாவும் தாத்தாவும் கட்டட வடிவமைப்பாளர்கள். க்ரௌலியின்
எமி வாடா அற்புதமான உடை வடிவமைப்பாளர். நவம்பர்2021 ல் அவர் காலமானபோது அவருக்கு வயது 83. ஆசியாவிலிருந்து பல்வேறு கண்டங்களுக்கு பயணம் செய்து திரைப்படங்கள், இசை நாடகங்கள் போன்றவற்றிற்கான உடைகளை வடிவமைத்த முதல் ஆசியப்பெண். ஓவியக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தான் ஜப்பானின் கலாசார நகரமான
எல்லாக் கதைகளும் சொல்லியாகிவிட்டன. புதிதாய் இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை. துயரங்கள் அனைத்தும் இன்று காலாவதியாகிவிட்டன. அமெரிக்கா மாற்றம் கொள்ளத் தொடங்கிவிட்டது. ஒரு கறுப்பர் அமெரிக்காவின் ஜனாதிபதியாகவே ஆகிவிட்டார்..எல்லாம் மாறிவிட்டன இனி பழைய பாணியில் அடிமைகளாக இருந்த கதையை சொல்லும் நிலையில் இல்லை என்பது தான் ஆப்ரிக்க
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த இருபது ஆண்டுகளாய் ஒரு பழக்கம் தொற்றிக் கொண்டுள்ளது. சின்னச்சிறிய கிராமங்கள் தங்களின் ஜாதி அடையாளத்தை ஊரின் முகப்பிலேயே காட்டிவிடுவது பல கால வழக்கம் தான் என்றாலும் இப்போதைய நவீன வடிவமாய் அதற்கான முகமாய் நடிகர்களை வரித்துக் கொண்டிருக்கின்றனர். ஊரின் நுழைவாயிலில்