Homeகட்டுரைகள்
Archive

(சமீபத்தில் வெளியான எனது 'மாபெரும் சபை' புத்தகத்தின் முன்னுரை) தமிழ் சினிமா பல்வேறு பரிட்சார்த்த முயற்சிகளை செய்துள்ளது. ஒரு நீண்ட பயணம் அதற்குண்டு. எந்தச் சாதனையையும் செய்கிற ஆர்வம் கொண்டது தமிழ்த்திரை. கற்பனைத்திறனும், தொழில்நுட்பமும், கலைஞர்களின் தொடர் வரவையும் தன்னிடத்தில் உள்ளடக்கியது. இவற்றையெல்லாம் தொகுத்து சினிமா பத்திரிகைகள்,

அப்பாலே போகும் யாத்ரீகன் “எளிமை தான் மிகக் கடினமானது” – மார்டின் ஸ்கார்சிஸ் கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக சினிமாவுக்காக நின்று நிதானமாக உழைத்துக் கொண்டிருக்கிறார் மார்டின் ஸ்கார்சிஸ் (Martin Scorsese). இப்படித்தான் இவரது படம் இருக்கப்போகிறது என்று கணிப்பதற்குள்ளாகவே வெவ்வேறு தளங்களில் கதையை நகர்த்திச் சென்று விடுபவர்.  

எஸ்.எஸ். வாசன் இயக்குநராகவும் வெற்றி பெற்றவர். ஒவ்வொரு படத்திலும் சாதனைகள் செய்தே தீருவேன் என்று ஒருவர் படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படியான படங்கள் தான் எஸ்.எஸ்.வாசன் இயக்கியதும் தயாரித்ததுமானவை. ஒரு தயாரிப்பாளராக அவர் சினிமாவின் போக்கினை மாற்றியிருக்கிறார். சினிமா என்பது வியாபாரம் என்றால், அது

தமிழில் அதிகம் கவனிக்கப்படாத, அதே நேரம் நவீன சிந்தனையுடன் படங்களை இயக்கியவர் A.T கிருஷ்ணசாமி. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். ‘சபாபதி’ என்கிற படம் 1941ல் வெளிவந்தது. எண்பது வருடங்களை படம் கடந்துவிட்டது. இப்போதும் தொலைகாட்சியில் அந்தப் படத்தினை ஒளிபரப்பும்போது ரசிக்கபப்டுகிற வரிசையில் உள்ளது சபாபதி. தமிழின் முதல்

தமிழை வாசிக்கத் தெரிந்த ஒருவராய் இருப்பதின் பேறு சில எழுத்தாளர்களை படிக்கும்போது உணர முடியும். தமிழ் தெரியாமல் போயிருந்தால் கி. இராஜாநாராயணனை வாசிக்காமல் அல்லவா  இருந்திருப்பேன் என்று நினைத்துக் கொள்வேன். குறிப்பாக,அவரது எழுத்துக்களை வாசித்து முடிக்கும் ஒவ்வொரு தருணங்களிலும். கரிசல் நிலத்தின் வழக்காறுகளை அதன் இயல்பு

(2016 ஆம் ஆண்டு ‘உலகை ஆளும் ராசாத்திகள்’ என்கிற ஒரு தொடரை தொடர் மல்லிகை மகள் இதழுக்காக எழுதினேன் வெளிவந்தது. அதில் இடம்பெற்ற ஒரு அத்தியாயம் இந்தக் கட்டுரை) ஐஸ்வர்யா ராய் என்கிற பெயர் இந்தியாவில் இருபத்தைந்து ஆண்டுகளாக தொடர்ந்து உச்சரிக்கப்படுகிறது. 1994ஆம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருந்த

திருநெல்வேலியில் இருந்த இருபது வருட காலகட்டத்தில் மூன்று வீடுகள் மாறியிருப்போம். ஒவ்வொரு வீட்டிற்கும் மறக்க முடியாத நினைவுகள் பல உண்டு. ஆனால் சென்னை குடிவந்த பிறகும் காலை மணி ஆறு என்றடிக்கும்போது திருநெல்வேலி சிக்கநரசய்யன் கிராமத்தில் வசித்த வீடு நினைவுக்கு வந்துவிடுகிறது. அங்கு இருக்கும் முருகன்

ஒரே ஒரு திரைப்படம். அது காலங்கள் கடந்தும் பேசப்படுகிறது. இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு அமெரிக்க லைப்ரரி காங்கிரசில் இருந்த அதன் பிரதி டிஜிட்டல்மயமாக்கப்பட்டு மீண்டும் பார்வையாளர்களுக்குத் திரையிடப்பட்டது. எந்த ஒரு ஆப்ரிக்க அமெரிக்க திரைப்பட இயக்குனரிடம் அவரை பாதித்த படங்கள் என்று கேட்டால் அவர்கள் இந்தப்

/