சில வருடங்களுக்கு முன்பு ஒளிப்பதிவாளர் ஸ்ரீனிவாச தேவாம்சம் அவர்கள் ஒரு புத்தகத்தினைக் கொடுத்து படிக்கச் சொன்னார். அதுபுகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களின் நேர்காணல்கள் அடங்கிய ஆங்கிலப் புத்தகம். முதல் சில பக்கங்களைப் படித்ததுமே அது தமிழில் மொழிபெயர்க்க வேண்டிய புத்தகம் என்பதாகத் தெரிந்துவிட்டது.‘Masters of Light’ என்கிறஅந்தப் புத்தகத்தைத்தொடர்ந்துவாசிக்கையில்அந்த எண்ணம் வலுக்கத் தொடங்கியது.
ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ள வருபவர்கள் மற்றும் அதில் முயற்சி செய்ய இருப்பவர்களுக்கும் எப்போதுமே முன்னுதாரணங்கள் தேவைப்படும். ‘இவ்வளவு தான்..இதற்கு மேல் சுலபம்’ என்று தோள் தட்டி சொல்லும் வழிகாட்டுதல்கள் அமைந்தால் இன்னும் சிறப்பு. அப்படியாக வழிகாட்டக் கூடியவர்கள் இந்த ஒளி வித்தகர்கள். புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்கள் எட்டு பேர்களின் நேர்காணல்களின் மொழிபெயர்ப்பு இந்தப் புத்தகம்