இரண்டாம் பாகத்தில் ஏழு ஒளிப்பதிவாளர்களின் நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன.அனைவருமே தங்களது பாணியில் சாதித்தவர்கள். ஒளிப்பதிவின் தரத்தினை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியவர்கள். ஹாலிவுட்டின்ஒளிப்பதிவென்பது தட்டையான, அதீத வெளிச்சத்தினைத் திரையில் காட்டிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அதை மாற்றி அமைப்பதென்பது எளியதான காரியமாக இந்த ஒளிப்பதிவாளர்களுக்கு அமையவில்லை.
அவர்கள் ஸ்டுடியோ நிர்வாகத்துடன் விவாதிக்க வேண்டியிருந்தது. இந்தஒளிப்பதிவாளர்களுக்கு ஊக்க சக்தியாய் இருந்தவர்கள் அப்போதைய தலைமுறையைச் சேர்ந்த இயக்குநர்கள். இந்த இயக்குநர்களும் ஹாலிவுட்டின் வழக்கமான பாணியினால் சலித்துப் போயிருந்தனர். தங்களின் கற்பனைக்கேற்ற புதிய யுத்திகளைப் பயன்படுத்தும் ஒளிப்பதிவாளர்களுக்காக அவர்கள் காத்திருந்தனர். திரைப்படத்துறையின் இந்த இரண்டு புதிய தலைமுறைகளும் சந்தித்துக் கொண்ட பின்னர் பல மாயாஜாலங்கள் நிகழ்ந்தன